Pages

Saturday, September 08, 2007

Please Findout ICICI Website

எனக்கு நண்பர் அனுப்பிய ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) சம்பந்தமான மின்னஞ்சல் ஒன்றினை வலைப்பதிவர்களுக்காக இங்கே பதிவு செய்கின்றேன்.

நண்பர்களே நீங்கள் ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) இணையதளத்தை உபயோகிப்பவரா? அப்படியென்றால் இது உங்களுக்கானதுதான்.

தயவுசெய்து ஐசிஐசிஐயின் இணையதளத்தை பயன்படுத்தும்பொழுது நீங்கள் சரியான இணையதளத்தைதான் தட்டச்சு செய்திருக்கின்றீர்களா என்று கவனிக்கவும்.

ஆமாங்க ஐசிஐசிஐ மாதிரியே அசலாக இன்னொரு இணையதளத்தை போலிகள் வடிவமைத்துள்ளார்கள். சாதாரண பார்வையில் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிப்பது கடினம். கொஞ்சம் கழுகுப் பார்வையில் பார்க்கணும்ங்க...
சாப்ட்வேர் இஞ்சினியராக இருந்தாலும் சரி ஏமாந்து போகக்கூடிய அளவுக்கு போலி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நீங்கள் உண்மையான இணையதளம் என்று நினைத்து உங்களின் பயனர் முகவரியையும் (User Name)- கடவுச் சொல்லையும் (Password) தட்டச்சு செய்துவிட்டால் அவ்வளவுதான் நொடி நிமிடங்களுக்குள் உங்களின் பணத்தினை ஆன்லைனில் மாற்றி விட வாய்ப்புண்டு.

போலியையும் நிஜத்தையும் எப்படி கண்டறிந்து கொள்வது? இதோ இங்கே இணைக்கப்பட்டுள்ள இரண்டு படத்தினையும் பாருங்கள்.


DUPLICATE


Photo Sharing and Video Hosting at Photobucket



ORIGINAL



Photo Sharing and Video Hosting at Photobucket


போலி

1. http என்று ஆரம்பித்திருக்கும்
2. கீழே பூட்டு போன்ற படம் இல்லாமல் இருக்கும் ( Padlock icon)

நிஜம்

1. https என்று ஆரம்பித்திருக்கும்
2. கீழே பூட்டு போன்ற படம் இருக்கும் (Padlock icon)


இப்பொழுது உங்களுக்கு செய்முறைப் பயிற்சி. இதோ கீழே தரப்பட்டுள்ள இரண்டு இணைப்பையும் (Links) சொடுக்கிப் பார்த்து எது நிஜம்? எது போலி? என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

https://infinity.icicibank.co.in/BANKAWAY?Action.RetUser.Init.001=Y&AppSignonBankId=ICI&AppType=corporate&abrdPrf=N%20


https://infinity.icicibank.co.in/BANKAWAY?Action.RetUser.Init.001=Y&AppSignonBankId=ICI&AppType=corporate&abrdPrf=N

முதல் இணைப்பிற்கும் (Link) , இரண்டாவது இணைப்பிற்கும் (Link) ஒரே ஒரு வித்தியாசம் தான். போலியில் முடிகின்றபொழுது ஒரு சிறிய இடைவெளி (20% = space)இருக்கின்றது. எப்பொழுதுமே திருடர்கள் எதையாவது விட்டுச் செல்வார்கள் என்பது இதில் நிஜமாகிவிட்டது. ஆம் ஒரே ஒரு இடைவெளி விட்டுச் சென்றிருக்கின்றார்கள். ஆகவே அந்த இடைவெளிக்கு இடம் தந்துவிடாதீர்கள்.

உழைத்து சம்பாதித்த பணத்தை எவனோ கம்ப்யுட்டர் கொள்ளையனுக்கு கொடுக்க வேண்டுமா என்ன? அறிவியல் முன்னேற்றம் வளர வளர அந்த அளவுக்கு ஆபத்துக்களும் வந்துகொண்டிருக்கும் போலிருக்குதே..? இவற்றையெல்லாம் தடுப்பதற்கு வழியே இல்லையா?

தடுக்க முடிகின்றதோ இல்லையோ நண்பர்களே நீங்கள் அந்த இணையதளத்தை பயன்படுத்தும்பொழுது உஷாரா இருங்கப்பா.



- ரசிகவ் ஞானியார்

0 comments: